பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விலைத் திருத்தத்திற்கு நிகராக SINOPEC மற்றும் IOC நிறுவனங்களும் விலை திருத்தம்!

Friday, December 1st, 2023

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விலைத் திருத்தத்திற்கு நிகராக SINOPEC மற்றும் IOC ஆகிய நிறுவனங்களும் விலை திருத்தத்தினை மேற்கொண்டுள்ளன.

இதன்படி, 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

இதறகமைய, 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 346 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

95 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 426 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

சூப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 3 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 434 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நேற்று (30) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொண்டது.

இதன்படி, பெற்றோல் 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டு, புதிய விலை 346 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 95 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை மூன்று ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, புதிய விலை 426 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை இரண்டு ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ள நிலையில், புதிய விலை 247 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: