கெரோனா வைரஸ் : சீனாவிடம் அனுமதி கோரிய இலங்கை அரசாங்கம்!

Tuesday, January 28th, 2020

கெரோனா வைரஸ் முதலாவதாக தொற்ற ஆரம்பித்த வூஹான் நகரிலுள்ள 33 இலங்கை மாணவர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவதற்காக வானுர்தி ஒன்றை அந்த நகரில் தரையிறக்க இலங்கை அரசாங்கம் சீனாவிடம் அனுமதி கோரியுள்ளது.

எனினும், எந்தவொரு நாட்டிற்கும் இதுபோன்ற அனுமதி இதுவரை கிடைக்க பெறவில்லை என சீனாவில் உள்ள இலங்கை தூதரக காரியாலயத்தின் இரண்டாம் நிலை செயலாளர் இனோகா வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சீனாவின் டியேங்ஜின் நகரில் இருந்து 21 இலங்கை மாணவர்கள் இலங்கை;கு திரும்பியுள்ளனர்.

சிச்சுவான் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து வானுர்தி தளம் வரை பேருந்து மூலம் அழைத்து வரப்படவுள்ள அந்த மாணவர்களை அழைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts:

யாழ்ப்பாணத்தில் நேற்றிரவு கடும் காற்றுடன் கூடிய மழை - 55 பேர் பாதிப்பு என மாவட்ட அனர்த்த முகாமைத்துவ...
சுகாதார விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் -பொது சுகாதார பரிசோதகர்...
ஓய்வூதியம் கிடைக்காதவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் வேலைத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது - உள்நாட...