விசா கட்டணத்தை உயர்த்தியது சவுதி!

Wednesday, August 10th, 2016

சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை வீழ்ச்சியால் பெரும் நெருக்கடியை சந்தித்து வரும் சவுதி அரேபியா வருமானனத்தை அதிகரிக்க விசா கட்டணத்தையும் உயர்த்தவுள்ளது.

எண்ணெய் ஏற்றுமதி வருவாய் குறைந்திருக்கும் சூழலில் கடந்த ஆண்டு வரவு செலவு திட்டத்தில் சவுதி சுமார் 100 பில்லியன் டொலர் பற்றாக் குறையை சந்தித்தது. இந்நிலையில் தனது வருவாயை அதிகரிக்க சவுதி புதிய வழிகளை தேடி வருகிறது.

அமைச்சரவையில் அங்கீகாரம் கிடைத்திருக்கும் புதிய விசா கட்டணத்தின்படி பல நுழைவு அனுமதி கொண்ட இரண்டு ஆண்டு விசா கட்டணம் 8,000 ரியால்களாக (3,10,500 ரூபாய்) உயர்த்தப்பட்டுள்ளது.

அதேபோன்று பல தடவை நுழைவு மற்றும் வெளியேறும் மூன்று மாத வீசா கட்டணம் 500 ரியால்களாக உயர்த்தப்பட்டுள்ளது. முன்னர் ஆறு மாதங்களுக்கே இந்த தொகை அறவிடப்பட்டது. எனினும் ஹஜ் மற்றும் உம்ராவுக்கு முதல்முறை பயணிப்பவர்களுக்கு விசா கட்டணம் தவிர்க்கப்பட்டுள்ளது. வரும் ஒக்டோபர் 2ஆம் திகதி தொடக்கம் புதிய கட்டணம் அறவிப்படவுள்ளது. சவுதியில் சுமார் 10 மில்லியன் வெளிநாட்டினர் தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.

Related posts: