போக்குவரத்து சட்ட விதிமுறைகளை மீறிய 22 பேருக்கு அபராதம்!

Sunday, May 1st, 2016

கடந்த புதுவருடதினத்தன்று(14) அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி மதுபோதையில் வாகனம் செலுத்திய 22 சாரதிகளுக்கு 1 இலட்சத்து 99 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதித்து, மல்லாகம் மாவட்ட மேலதிக நீதிவான் ரீ.கருணாகரன் தர்ப்பளித்தார்.

வியாழக்கிழமை (28) அச்சுவேலி போக்குவரத்து பொலிஸார்; தாக்கல் செய்த 25 வழக்குகளில் 22 வாகன சாரதிகளுக்கே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டது.

மதுபோதையில் வாகனம் செலுத்தியதுடன்  எவ்வித பத்திரங்களுமின்றி பொலிஸ் சமிக்கையினை மீறிச்சென்ற அச்சுவேலி, புத்தூர் அச்செழு பகுதிகளைச் சேர்;ந்த நால்வருக்கு தலா 15 ஆயிரம் வீதம் 60 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

மதுபோதையில் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் மற்றும் வாகனம் செலுத்திய மூவருக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வீதம் 30 ஆயிரம் ரூபாய் அபராதமும் மேலும் மூவருக்கு தலா 9 ஆயிரம் ரூபாய் வீதம் 27 ஆயிரம் ரூபாயும், மேலும் எண்மருக்கு தலா 6,000 ரூபாய் வீதம் 48 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதித்ததுடன் இதில் நால்வரின் சாரதி அனுமதிபத்திரங்களை 2 மற்றும் 3 மாதங்களுக்கு இரத்து செய்யுமாறு  நீதிவான் உத்தரவிட்டார்.

யுnஉhழசகுடிபோதையில் அபாயகரமான முறையில் மோட்டார்; சைக்கிள் செலுத்திய தோப்பு அச்சுவேலி பகுதியினை சேர்ந்தவருக்கு 7,500 ரூபாய் அபராதமும் இரண்டு மாதம் சாரதி அனுமதிபத்திரத்தை இரத்து செய்தும் நீதவான் உத்தரவிட்டார்.

மேலும்  தலைக்கவசம் மற்றும், எந்தவித பத்திரமும் இன்றி, வாகனத்தின் முன் இலக்கத்தகடு இல்லாமல் பொலிஸாரின் சமிக்கையினை மீறிச் சென்ற சிறுப்பிட்டி மேற்கு பகுதியினை சேர்ந்த சாரதிக்கு அதிகூடிய தொகையாக 12 ஆயிரம் தண்டம் விதிக்கப்பட்டது.

மேலும் இருவருக்கு 7,000, மற்றும் 8,000 ரூபாய் அபராதம் விதித்ததுடன் சாரதி அனுமதிபத்திரத்தினை இரண்டு மாதகாலங்களுக்கு இரத்து செய்தும் நீதவான் உத்தரவிட்டார்.

Related posts: