விகாரைகள், தேவாலயங்கள் தொடர்பான சட்ட மூலம் நாளை சபைக்கு வராது!

Monday, October 3rd, 2016

விகாரைகள், தேவாலயங்கள் தொடர்பான சட்ட மூலத்தை, அனைத்து மகாநாயக்கர்களின் ஒன்றிணைந்த கோரிக்கை கிடைக்கும் வரை, பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்காதிருக்க, அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ முடிவு செய்துள்ளதாக, பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.

பிரதமர் மற்றும் ஜனாதிபதியின் கோரிக்கையினை அடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.  முன்னதாக கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் நாளை (04) விகாரைகள் மற்றும் தேவாலயங்கள் தொடர்பான சட்ட மூலத்தை பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளவுள்ளதாக, அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தலைமையில் பாராளுமன்ற வளாகத்தில் இன்று கட்சித் தலைவர்களுடனான சந்திப்பு இடம்பெற்றது.  இதன்போது விகாரைகள் மற்றும் தேவாலயங்கள் தொடர்பான சட்ட மூலத்தை, அனைத்து மகாநாயக்கர்களின் ஒன்றிணைந்த கோரிக்கை கிடைக்கும் வரை, பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்காதிருக்க, முடிவு செய்துள்ளதாக, திலங்க சுமதிபால குறிப்பிட்டுள்ளார்.

160621070646_srilanka_parliment_512x288__nocredit

Related posts: