அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டும் குடிநீரினை பாவிக்கவும் !

Monday, October 3rd, 2016

அத்தியாவசியத் தேவைககள் தவிர்ந்த வேறு தேவைகளுக்காக குடிநீரைப் பயன்படுத்த வேண்டாமென, தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

மேல், தெற்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாண நீர்த்தேங்கங்களின் நீர் மட்டங்கள் குறைந்துள்ளன.மேலும், தற்போது நிலவும் வரட்சியான வானிலை காரணமாக, நீரின் பயன்பாடும் அதிகரித்துள்ளது. இதனால், நீருக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது என, அச்சபை தெரிவித்துள்ளது.

தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் நீர் விநியோகிக்கப்படாத பிரதேசங்கள், பாரியளவிலான நீர்த் தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ளன.குறித்த பிரதேசங்களுக்கு, பவுசர்கள் மூலம், இலவசமான நீர் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இதனால், நீரை மிகவும் சிக்கனமான முறையில் பயன்படுத்துமாறும், அச்சபை மேலும் கேட்டுக்கொண்டுள்ளது.

இதேவேளை, தற்போது நிலவும் வரட்சியான வானிலை, எதிர்வரும் 10ஆம் திகதிக்குப் பின்னர் குறைவடையுமெனத் தெரிவித்துள்ள வானிலை அவதான நிலையம், அத்தினத்துக்குப் பின்னர், நாட்டில் பருவமழையை எதிர்ப்பார்க்க முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளது.இது இவ்வாறிருக்க, தற்போது நிலவும் வரட்சியான வானிலை காரணமாக, மின் விநியோகத்தில் தடையேதும் ஏற்படுத்தப்பட மாட்டாதென, மின்வலு மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு தெரிவித்தது.

water-board

Related posts: