வாழைப்பழத்தின் விலை வீழ்ச்சி!
Tuesday, May 29th, 2018
யாழ் குடாநாட்டுச் சந்தைகளில் தற்போது வாழைப்பழத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.
குறிப்பாக சுன்னாகம், மருதனார்மடம், திருநெல்வேலி ஆகிய சந்தைகளில் கதலி வாழைப்பழம் கிலோ ரூ.10 ௲ 20 விலையிலும், இதரைப்பழம் கிலோ ரூ 20 -30 விலையிலும் விற்பனை செய்யப்படுகின்றன.
கடந்த சில நாட்களாக பெய்த தொடர்மழை மற்றும் தென்னிலங்கைக்கான வாழைப்பழம் ஏற்றுமதி குறைவடைந்தமையும் இவ் விலைச்சரிவிற்கான காரணமாக இருக்கலாம் என விவசாயிகள் கவலையுடன் தெரிவித்தனர்.
இதேவேளை கடந்த பல மாதங்களாக அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வந்த தேங்காயின் விலை குறைவடைந்துள்ளமையால் நுகர்வோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Related posts:
ஏதோவொரு வகையில் இன்றைய பெண்கள் தங்களின் தனித்துவங்களை வெளிப்படுத்தி வருகின்றனர் : யாழ். பல்கலைக் கழக...
பாடசாலை மாணவர்களுக்கு பேருந்து சேவை ஆரம்பம்!
வடக்கு – கிழக்கு மாகாணங்களில்அவ்வப்போது மழை பெய்யும் - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!
|
|
|


