தேங்காய் உடைத்ததாலேயே ஹிலாரி தோல்வியுற்றார் -அமைச்சர் ராஜித சேனாரத்ன

Thursday, November 10th, 2016

இனபேத அடிப்படையிலேயே இங்குள்ள ஒருவர் சிதறுகாய் உடைத்தார். அதனாலேயே ஹிலாரி கிளிண்டன் தோற்றார் என்று அமைச்சரவை அவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின்போது, டொனலட் ட்ரம்பின் வெற்றி குறித்து ஊடகவியளாலர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தாவது,

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள குடியரசுக் கட்சியின் தலைவர் டொனால்ட் ட்ரம்ப், உலக நாடுகளின் விவகாரத்தில் தலையிடாமல் தமது நாட்டுப் பிரச்சினைகளை தீர்த்து செயற்படுவாராயின் அதுவே சிறந்தது. அவர் இனவாதி அல்ல. ட்ரம்பின் செயற்பாடுகள் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு சிறந்தது. டெனால்ட் ட்ரம்ப் வெற்றி பெறுவார் என்பதில் எனக்கு நம்பிக்கை இருந்தது. முன்னர் பராக் ஒபாமா வெற்றி தொடர்பிலும் நான் நம்பிக்கை கொண்டிருந்தேன். ட்ரம்ப் சாதாரண மக்களின் செல்வாக்கைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவர் முன்வைத்த கொள்கைப்படி செயற்படுவாராயின் சிறந்ததாகும். நல்லிணக்கத்திற்கு அதுவே சிறந்தது. அனைவரும் குறிப்பிடுவதைப் போன்று அவர் அந்தளவு பெரிய கடும் போக்காளர் அல்லர். அவரோடு, இங்குள்ள விடயங்களை ஒப்பிட முடியாது. இங்கு இனபேதம் உண்டு. இனபேத அடிப்டையிலேயே இங்குள்ளவர் சிதறுகாய் உடைத்தார். அதனாலேயே ஹிலாரி கிளிண்டன் தோற்றார். இங்கு இனவாதத்திற்கு இடமில்லை என்றார்.

dr-_rajitha_senaratne

Related posts: