யாழ்ப்பாணத்தை உலுக்கும் வாள்வெட்டுக் கும்பல்: இதுவரை 81 பேர் கைது 75 பேருக்குப் பிணை!
Wednesday, November 22nd, 2017
வாள்வெட்டுக்குழுக்களின் அட்டகாசத்தை அடக்கும் முயற்சியாக கடந்த சில நாள்களில் மட்டும் பொலிஸாரால் 81 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 6 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். மிகுதி 75 பேரும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர் என்று வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் றொசான் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.
சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட 7 மோட்டார்சைக்கிள்கள் பொலிஸ்நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன. மேலதிக விசாரணை இடம்பெறுகிறது. இந்த நடவடிக்கை தொடரும் என்று பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணக் குடாநாட்டில் வாள்வெட்டுக்குழுக்களின் அடாவடி அதிகரித்துள்ள நிலையில் இந்தப் பொலிஸ்குழு அமைக்கப்பட்டது. தினமும் மாலை நேரங்களிலிருந்து நள்ளிரவு வரை இந்தச் சுற்றிவளைப்பும் தேடுதலும் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ரவிராஜ் கொலை தொடர்பான வழக்கு முடிவு விரைவில்!
பெருமளவிலான ஊழியர்கள் அரசியல் நியமனங்களின் அடிப்படையில் சேவையில் இணைந்துள்ளனர் - அமைச்சர் ஜீவன் தொண்...
இஸ்ரேலில் உள்ள இலங்கை பணியாளர்கள் தொடர்பில் இலங்கை தூதரகம் அவதானத்துடன் உள்ளது - தொழில் மற்றும் வெள...
|
|
|


