வானிலை அவதான நிலையம் விடுத்துள்ள எச்சரிக்கை!

Saturday, March 14th, 2020

நாட்டின் பல்வேறு இடங்களில் இன்றும், நாளையும் வெப்பநிலை கடும் உயர்வை கொண்டிருக்கும். எனவே பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு வானிலை மையம் அறிவித்துள்ளது.

இன்று காலையில் இருந்து சில இடங்களில் வெப்பநிலை உயர்வை காட்டியது. இந்நிலையில் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மாத்தறை குருநாகல் மற்றும் மொனராகலை மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு அவதான எச்சரிக்கையை வானிலை மையம் விடுத்துள்ளது.

இந்த பிரதேசங்களில் வெப்பம் எச்சரிக்கை நிலைக்கு அதாவது 32 முதல் 41 செல்ஸியஸாக இருக்கும். இதன்காரணமாக அங்குள்ள மக்கள் சோர்வு நிலையை உணர்வார்கள்.

இந்தநிலையில் வெப்ப சூழ்நிலையில் தொடர்ந்தும் பணியாற்றும்போது, வெப்பத்தினால் ஏற்படும் தசைப்பிடிப்புக்கு உள்ளாகவேண்டி வரும் என்றும் வானிலை அவதான மையம் எச்சரித்துள்ளது.

Related posts: