தமிழர் பிரதேசங்களில் தேசிய கீதம் தமிழில் பாடுவது உறுதிப்படுத்த வேண்டும் என ஈ.பி.டி.பி வலியுறுத்து- கூட்டமைப்பினர் எதிர்ப்பால் வேலணை பிரதேச சபையில் அமளிதுமளி!

Friday, August 26th, 2022


……..
நாட்டின் அரசியல் சாசனத்தில் உள்ளவாறு தேசிய நிகழ்வுகளிலும் தேசிய கீதம் தமிழிலும் பாடப்பட வேண்டும்.
குறிப்பாக தமிழர் பூர்வீக பகுதிகளில் தமிழில் பாடப்பட வேண்டும் என்பது உறுதிசெய்யப்பட வேண்டும் என்பதுடன் அதனை நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும் என வேலணை பிரதேச சபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டதை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் எதிர்த்ததால் சபை அமர்வில் கடும் இவாதம் இடம்பெற்றுள்ளது

வேலணை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்றையதினம் தவிசாளர் கருணாகரமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

இதன்போது ஈழ மக்கள் ஜனநாய கட்சியின் உறுப்பினரான திருமதி அனுசியா ஜெயகாந்த் குறித்த விடையம் தொடர்பில் கோரிக்கை ஒன்றை சபையில் முன்வைத்திருந்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில் –

தமிழில் தேசியகீதம் பாடப்படுவது நாட்டின் அரசியல் சாசனத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

எமது இலங்கைத்தீவில் இன மத மொழி நல்லிணக்கம் வலுப்படுவதனூடாக்வே நிலையான ஒரு பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திர நிலையை உருவாக்கிக்கொள்ள முடியும்.

இந்த ஜதார்த்த நிலையை எமது கட்சியாலும் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவினாலும் கடந்த மூன்றரை தசாப்தங்களுக்கு மேலாக வலியுறுத்தப்பட்டு வருகின்றது

இந்நேரம் இந்த ஜதார்த்தம் தற்போது அனைவரிடத்திலும் உணரப்பட்டாலும் முழுமையான நடைமுறைக்கு வருவதில் எங்கோ தாமதங்கள் இருந்து வருகின்றது.

எமது நாட்டில் தமிழ் மொழியும் தேசிய மொழியாகவே நாட்டின் அரசியல் சாசனத்தில் உறுதி செய்யப்பட்டுல்ளது.
ஆனால் எங்கோ இருக்கின்ற சில விருப்பு வெற்றுப்புகள் தடைகள் காரணமாக அதை நடைமுறைப்படுத்துவதில் குழப்பங்கள் காணப்படுகின்றது.

இதனாலதான் தமிழர் பகுதிகளில் தேசிய கீதம் தமிழில் பாடப்படும்.நடைமுறையிலும் குழப்பங்கள் ஏற்பட்டு வருகின்றது.

அண்மையில் எமது கட்சியின் தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா குறித்த விடயம் தொடர்பில் அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு வந்ததற்கிணங்க தேசிய நிகழ்வில் தமிழிலும் பாடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அந்தவகையில் எமது தாய்மொழியான தமிழ் மொழியில் தமிழர் வாழும் பகுதிகளில் தேசிய கீதத்தை பாடுவதற்கு நாம் உறுதி செய்ய வேண்டும்.

இதை எமது சபையும் வலியுறுத்த வேண்டும் என்பதுடன் அதை வலியுறுத்தி ஒரு பிரேரணையாக நாம் நிறைவேற்றி அதனூடாக முன்மாதிரியாக திகழ்வோம்.

அத்துடன் என்தெந்தமொழி பேசும்.மக்கள் எந்தெந்த பிரதேசங்களில் செறிந்து வாகின்றார்களோ அங்கெல்லாம் அவர்கள் மொழிக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.என்ற எமது தலவர் டக்ளஸ் தேவானந்தாவின் நிலப்பட்டிற்கு அமய தமிழ் மக்கள் செறிந்து வாழும் இடங்களில் தேசிய கீதமும் தமிழிலேயே படப்பட வேண்டும் எனவும் வேலணை பிரதேச சபையில் ஈழ மக்கள் ஜனநாய கட்சியின் உறுப்பினரான திருமதி அனுசியா ஜெயகாந்த் வலியுறுத்தியிருந்தார்.

இன்நிலையில் குறித்த விடயம் சபையின் உறுப்பினர்களால் விவாதில்கப்பட்டது.
அத்துடன் அந்த நடைமுறை ஏற்கனவே அரசியல் சாசனத்தில் இருந்தாலும் அது முழுமையாக நடமுறைப்படுத்தப்படுவதில் இழுபறிகள் இருந்து வருகின்றன். எனவும் சுட்டிக்கட்டப்பட்ட போதிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அதை வலியுறுத்த இணங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Related posts:


சர்வகட்சி ஆட்சி அமைப்பதற்காக ஒவ்வொரு தரப்பினரும் முன்வைத்த யோசனைகள் அனைத்துக் கட்சிகளுக்கும் அறிவிக்...
தற்காலிக சாரதி அனுமதி பத்திரம் பெற்ற 6 இலட்சம் பேருக்கு சாரதி அனுமதி பத்திரத்தை அச்சிட்டு தபால் மூலம...
கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தையை விரைவில் நிறைவு செய்ய எதிர்பார்ப்பு - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ...