வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்துகள் சேவையில்!

Monday, February 6th, 2017

வவுனியாவில் அமைக்கப்பட்ட புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நேர அட்டவணை தயாரிக்கும் வரை எந்தவிதமான சேவைகளும் இடம்பெறமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அனால் நேற்று வவுனியா தனியார் பேருந்து உரிமையாளர் சங்கததினர் சேவைகளை நடத்தினர்.

பொதுமக்களின் பணத்தில் அமைக்கப்பட்ட புதிய பேருந்த நிலையம் மூடுவதற்காவா?. தனியார் பேருந்து சேவைகளை புதிய  பேருந்து நிலையத்திலிருந்தே மேற்கொள்ளவுள்ளோம். இது தொடர்பான கலந்தரையாடல் ஒன்று தனியார் பேருந்துச் சங்கத்தில் இடம்பெறவுள்ளது. அதன்பின்னர் நிலமைகள் அறியத்தரப்படும் என்று தனியார் பேருந்து சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் 195 மில்லியன் ரூபா செலவில் இலங்கையில் நவீன வசதிகளுடன் வவுனியா பேருந்து நிலையம் 16ஆம் திகதியன்று திறந்துவைக்கப்பட்டது.  அன்று முதல் இ.போ.ச மற்றும் தனியார் பேருந்து சாரதிகளுக்கிடையில் முறுகல் நலை ஏற்பட்டது.

கடந்த செவ்வாய்க்கிழமை தனியார் பேருந்து சாரதியல் இ.போ.ச பேருந்து சாரதிகள் தாக்கப்பட்டனர். சாரதிக்கு எதிராக வழக்க தாக்கல் செய்யப்பட்டது. இ.போ.ச சாலை ஊழியர்கள் பழைய பேருந்து நிலையத்தில் சேவைகள் மேற்கொள்ளத் தமக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கடந்த புதன்கிழைமை ஆர்பாட்டம் நடத்தினர். மறுநாள் வியாழக்கிழமை வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து இ.போ.ச சாலை பணியாளர்களும் பணிப்புறக்கணிப்பு நடத்தினர். மறுநாள் போராட்டம் உணவு ஒறுப்பு போராட்டமாக மாற்றமடைந்தது. நேற்று வவுனியா மாவட்ட செயலகத்தில் நீண்ட பேச்சு இடம்பெற்றது.

இணைந்த நேர அட்டவணை தயாரிக்கும் வரை புதிய பேருந்து நிலையத்தில் எந்த விதமான சேவைகளும் நடத்தப்படமாட்டாது. அதுவரை பழைய பேருந்து நிலையத்தில் தனியார் இ.போ.ச பேருந்துகள் சேவைகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. ஒப்ந்தத்தில் இரு தரப்பினரம் கைச்சாத்திட்டனர். நேற்று காலை இ.போ.ச சாலை பேருந்துகள் தமது சேவைகளை பழைமையான மத்திய பேருந்து நிலையத்தில் மேற்கொண்டன. தனியார் பேருந்து சேவைகளை புதிய பேருந்து நிலையத்தில் மேற்கொண்டனர்.

new_servise001

Related posts: