நல்லைக் குமரன் மலர் வெளியிட்டு வைப்பு!

Wednesday, August 24th, 2016

யாழ்ப்பாண மாநகராட்சி மன்றத்தின் சைவசமய விவகாரக் குழு வரலாற்றுச் சிறப்பு மிக்க  நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்தப் பெருந்திருவிழாவை முன்னிட்டு வருடாந்தம் வெளியிட்டு வரும் “நல்லைக் குமரன் மலர்-2016 வெளியீட்டு விழா”  இன்று  புதன்கிழமை(24) காலை-9.30 மணி முதல் யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டபத்தில் யாழ். மாநகர சபையின் தலைவர் பொ. வாகீசன் தலைமையில் இடம்பெற்றது.

வடமாகாண முதலமைச்சரும், நீதியரசருமான க. வி. விக்கினேஸ்வரன் விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டதுடன், யாழ். இந்தியத் துணைத் தூதுவர் ஆ. நடராஜன் சிறப்பு விருந்தினராகவும்  கலந்து கொண்டார்.

24 ஆவது பகுதியாக வெளிவந்துள்ள நல்லைக் குமரன் மலரினை  நூலின் பதிப்பாசிரியரும், வலம்புரிப் பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான ந. விஜசுந்தரம் சம்பிராதயபூர்வமாக வெளியிட்டு வைத்தார். முதற்பிரதியைப் பதிப்பாசிரியரிடமிருந்து தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான நிர்வாகத்தினர் பெற்றுக் கொண்டதுடன், சிறப்புப் பிரதியை யாழ். இந்தியத் துணைத் தூதுவர் ஆ.நடராஜன் பெற்றுக் கொண்டார்.

விழாவில் கிளிநொச்சி மாவட்ட ஓய்வு நிலை அரசாங்க அதிபரும், 400 இற்கும் மேற்பட்ட சிறார்களை  அரவணைத்துக் காத்து வரும் கிளிநொச்சி மகாதேவ ஆச்சிரமத்தின் தலைவருமான தி. இராசநாயகம் அவர்கள்  யாழ் விருதும், பொற்கிழியும்  வழங்கிக் கெளரவிக்கப்பட்டார்.

Related posts: