வல்வெட்டித்துறையில் வெடிபொருட்கள் மீட்பு!
Sunday, September 11th, 2016
வல்வெட்டித்துறை பகுதி தோட்டக்கிணறு ஒன்றில் இருந்து வெடிபொருட்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பிரதேசத்திலுள்ள வேவிலந்தை பகுதி தோட்டக்கிணற்றிலேயே வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. மேற்படி காணிகளை சில மாதங்களுக்கு முன்னர் கொள்வனவு செய்த ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை கிணற்றை இறைத்து சுத்தப்படுத்தியுள்ளார். இதன் போது அதற்குள் வெடிபொருட்கள் காணப்பட்டதையடுத்து வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு அவர் அறிவித்துள்ளார்.
விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் அக்கிணறு நேற்று தோண்டப்பட்ட போது அதிசக்கி வாய்ந்த இரண்டு கிளைமோர் குண்டுகள் மற்றும் பை ஒன்றில் கட்டப்பட்டிருந்த வெடி மருந்து என்பன மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட வெடிபொருட்கள் வல்லை வெளிப்பகுதியில் செயலிழக்கச் செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts:
2016 ஆம் ஆண்டுக்கான சிறந்த விவசாயிகளைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!
இலங்கைக்கு 150 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்க உலக வங்கி இணக்கம் !
மாமனிதர் எஸ்.பி. சாமி நினைவாக வேலணை பிரதேச சபைக்கு வழங்கப்பட்ட முச்சக்கர வண்டி!
|
|
|


