வலி.தென்மேற்கில் பரவுகின்றது டெங்கு – தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்!
Friday, December 16th, 2016
வலி.தென்மேற்குப் பிரதேசத்தில் டெங்குத்தொற்றுக்குள்ளான இருவர் இணங்கானப்பட்டதையடுத்து டெங்குக்கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
சுகாதாரப் பகுதியினர் நுளம்புகள் குடம்பிகளை அழிக்கும் வகையில் மருத்து விசிரும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். வலி.தென்மேற்குப் பிரதேசத்தில் ஏற்கனவே சாவற்கட்டு, ஆனைக்கோட்டை, மானிப்பாய், உயர்புலம் ஆகிய இடங்களில் டெங்குத்தொற்றுக்குள்ளான 45 பேர் இனங்காணப்பட்டனர். அந்தப் பகுதியில் டெங்குத்தொற்றைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டன. நேற்று முன்தினம் சாவற்கட்டு பகுதியில் இருவர் டெங்குத் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். சுகாதாரப் பகுதியினருடன் இணைந்து சண்டிலிப்பாய் பிரதேச செயலக உத்தியோகத்தரும், கிராம அலுவலர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோரும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

Related posts:
போலி நிறையுடன் காட்சிப்படுத்தப்பட்ட பிஸ்கட் பக்கற்றுக்கள் மீட்பு!
பாதுகாப்பு வலயத்தில் திருடப்படும் கால்நடைகளை பாதுகாக்க வேண்டும் - மீள்குடியேறிய பிரதேச மக்கள் கோரிக்...
நாட்டில் ஒட்சிசன் தேவைப்பாடு அதிகரித்துள்ளது - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவிப்பு!
|
|
|


