தென்மேற்கு பருவக்காற்று நிலையின் காரணமாக பலத்த காற்று – கடற்படை மற்றும் மீனவ சமூகங்களுக்கு எச்சரிக்கை!

Saturday, July 2nd, 2022

தற்போது தென்மேற்கு பருவக்காற்று நிலையின் காரணமாக மேற்கு மற்றும் தெற்கு கடற்பரப்புகளிலும் நாட்டின் தென்பகுதியிலும் நிலவும் காற்றின் நிலை மேலும் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யகூடும்.

மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யகூடும்.

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பல இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மத்திய மலைநாடுகளின் மேற்கு சரிவுகள், மேற்கு மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு (50-60) கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: