வலிகாமத்தில் புகையிலை அறுவடை மும்முரம்

Wednesday, April 13th, 2016

வலிகாமம் பகுதியில் புகையிலை அறுவடை ஆரம்பமாகி மும்முரமாக இடம்பெற்று வருகிறது.

குப்பிளான், ஏழாலை, குரும்பசிட்டி, புன்னாலைக்கட்டுவன்,கட்டுவன் மயிலங்காடு, சுன்னாகம், இணுவில், ஊரெழு, உரும்பிராய் , கோண்டாவில் , அச்செழு  போன்ற பகுதிகளில் பணப் பயிர் எனக் கருதப்படும் புகையிலைப் பயிர் பல ஏக்கர் நிலத்தில்  நடுகை செய்யப்பட்டிருந்தது.

கடந்த வருடம் கார்த்திகை, மார்கழி மாதங்களில்  நடுகை செய்யப்பட்ட இந்தப் புகையிலைப் பயிர் ஒன்றின் பெறுமதி தற்போது 60 ரூபா தொடக்கம் 100 ரூபா வரை விற்பனையாகிறது. முன்னர் புகையிலைப் பயிர் ஒன்று 100 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கடந்த வருடங்களுடன் ஒப்பிடும் போது இவ்வருடம் புகையிலைப் பயிர்ச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. புகைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணவு அதிகரித்தமையும் இதற்கான காரணங்களில் ஒன்றாகச் சொல்லப்படுகிறது.

Related posts: