வற் வரிக்கு தற்காலிக தடை!

Monday, July 11th, 2016

பொருட்கள் சேவைகள் தொடர்பில் அறவிடப்படும் VAT வரி தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட அதிகரிப்பை வழக்கு விசாரணைகள் முடியும் வரை தற்காலிகமாக நடைமுறைப்படுத்த வேண்டாம் என உச்ச நீதிமன்றம் இன்று (11) அறிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாது, கடந்த மே 02 ஆம் திகதி முதல் வற் வரி அறவிடப்படுவதாக தெரிவித்து, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்டோரால் மேற்படி வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

பிரதான நீதவான் கே. ஶ்ரீ பவன், புவனேக அலுவிகாரே மற்றும் பிரசன்ன ஜயவர்தன ஆகிய மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவின் முன்னிலையில் குறித்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதிபதிகள் குறித்த உத்தரவை வழங்கினர்.

முன்னைய ஆட்சியின் போது 15% ஆக இருந்த வரி 12% ஆக மாற்றப்பட்டு பின்னர் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் 11% ஆக குறைக்கப்பட்டது. அதனை அடுத்து அது, கடந்த மே மாதம் முதல் 15% ஆக அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: