வரட்சியான காலநிலை: ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பேர் பாதிப்பு!
Monday, January 16th, 2017
வரட்சியான காலநிலை காரணமாக நாடுமுழுவதும் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் வரட்சியான காலநிலை 9 மாவட்டங்களுக்கு தாக்கம் செலுத்துவதாக காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை, நாடுமுழுவதுமுள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டமானது குறைவடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மலையகத்தில் நீர் உற்பத்தியாகும் பகுதிகளில் நீர் மட்டம் குறைந்துள்ளதன் காரணமாக குறித்த பகுதிகளில் உள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் தாழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:
நோயாளிகள் பாதிக்கப்படுவதை ஏற்க முடியாது – நீதிக்கான மக்களின் குரல்!
அடுத்த மூன்று வாரங்கள் ஆபத்தானவை – இராணுவத் தளபதி எச்சரிக்கை!
பொருளாதார பிரச்சினைகளை தீர்க்க பல்வேறு மட்டத்தில் பேச்சுவார்த்தை - தற்போதைய நிதி நெருக்கடி தொடர்பில்...
|
|
|


