வண்ணை ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் ஆலய வருடாந்த மஹோற்சவம் ஆரம்பம்!

ஈழத்துத் திருப்பதி எனப் போற்றப்படும் பிரசித்தி பெற்ற யாழ். வண்ணை ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று வெள்ளிக்கிழமை (22) காலை-10.10 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
இன்று அதிகாலை விசேட அபிஷேக பூசை வழிபாடுகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து வசந்த மண்டபப் பூசை நடைபெற்றது. தொடர்ந்து சூரிய பரிதிச் சேவை எனப்படும் சூரிய ஒளிப்பிரகாசத்துடன் சீதேவி, பூமா தேவி சமேதரராக ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் உள்வீதி வலம் வந்தார்.
சுப நேரமான முற்பகல்-10.10 மணியளவில் ஆலயப் பிரதம குரு பிரம்ம ஸ்ரீ ரமணீஸ்வரக் குருக்கள் தலைமையில் கொடியேற்ற உற்சவம் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து சுவாமி வெளிவீதியுலா இடம்பெற்றது.
இன்றைய கொடியேற்ற உற்சவத்தில் நூற்றுக் கணக்கான அடியவர்கள் கலந்து கொண்டனர்.
Related posts:
வட மாகாண சபைக்கு எதிராக உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல்!
சோபித தேரரின் மரணம் தொடர்பில் வைத்தியர்களிடம் விசாரணை!
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை - வெளியானது பாடசாலை வெட்டுப்புள்ளிகள்!
|
|