வவுனியா மற்றும் மன்னாரில் கடந்த ஆண்டில் 14 ஆயிரத்து 514 பேர் போதைக்கு அடிமை – வன்னி பிரதி பொலிஸ்மா அதிபர்!

Saturday, April 7th, 2018

வவுனியா, மன்னார் மாவட்டங்களில் 2017 ஆம் ஆண்டில் 14 ஆயிரத்து 514 பேர் போதைக்கு அடிமையாகியுள்ளனர் என்று வன்னி பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்தார்.

போதையிலிருந்து விடுபட்ட வன்னி எனும் தொனிப்பொருளில் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்வில் பங்கு கொண்டு மாணவர்;கள் மத்தியில் உரையாற்றும் போதே பொலிஸ் மா அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

கடந்த 2017 ஆம் ஆண்டு வவுனியாவில் 7 ஆயிரத்து 355 நபர்களும் மன்னார் மாவட்டத்தில் 7 ஆயிரத்து 159 நபர்களும் போதைக்கு அடிமையானவர்களாக இனங்காணப்பட்டனர்.

ஆனாலும் வவுனியாவில் 158 பேரும் மன்னாரில் 82 பேர் மாத்திரமே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளனர். அதனால் பொலிஸ் அறிக்கையின் பிரகாரம் இனங்காணப்பட்ட போதைக்கு அடிமையான நபர்களுக்கு எதிர்வரும் யூலை மாதத்திலிருந்து புனர்வாழ்வு அழிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

எதிர்காலத்தில் வன்னி மாவட்டத்தில் சட்டவிரோத மது மற்றும் போதைப் பொருள் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

அரச தலைவரின் செயற்றிட்டத்துக்கு அமைவாக வன்னிப் பிராந்தியத்தை பாடசாலை, மாணவர்களின் உதவியுடன் மது போதையற்ற பகுதியாக மாற்றுவோம் என்றார்.

Related posts: