வடக்கில் பதிவின்றி இயங்கும் தொழிற் பயிற்சி நிலையங்கள்!

Thursday, November 3rd, 2016

யாழ்.குடநாட்டில் இயங்கும் அதிக தொழிற்பயிற்சி நிலையங்கள் பதிவுகள் இன்றியே இயங்குகின்றன. அவர்களின் சான்றிதழ்கள் தரமற்றவையாகவே கருதப்படுகின்றன. அவற்றில் கற்ற பின்னரே தாம் ஏமாற்றப்பட்டதை இளைஞர், யுவதிகள் உணர்கின்றனர். இவ்வாறு தொழிற்பயிற்சி அதிகார சபையினர் தெரிவித்துள்ளனர்.

வடக்கில் அதிகரிக்கும் வேலை வாய்பின்மையைப் போக்கவும், பட்டப்படிப்புக்கும் நிகரான கல்வியை பெறுவதற்கான வழிகாட்டல்களை இளைஞர், யுவதிகளுக்கு வழங்கும் நோக்குடன் யாழ்.வணிகர் கழகத்தில் வடக்கில் இயங்கும் சகல அரச தொழிற்பயிற்சி கூடங்களையும் உள்ளடக்கிய செய்தியாளர் சந்திப்பு நடத்தப்பட்டது. அதிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது. 2015ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி வடக்கில் மொத்தமாக 62 அரச தொழிற்பயிற்சி நிலையங்கள் உள்ளன. தனியார் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களால் இயக்கப்படும் 72 தொழிற்பயிற்சிக் கூடங்கள் உள்ளன. 72 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் உள்ள நிலையில் அவற்றில் 19 நிலையங்கள் மட்டுமே அரச அங்கீகாரத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டவை. தொழிற்பயிற்சி நிலையங்களும் பதிவுகள் இன்றியே இயங்குவதால் அவற்றின் சான்றிதழ்கள் தரமற்றவையாகவே கருதப்படுகின்றன. அதிக நிலையங்கள் கற்கை வழங்கும் சான்றிதழுக்கு மட்டும் பதிவை மேற்கொண்டு விட்டு பாடவிதான அங்கீகாரம் இன்றிச் செயல்படுகின்றனர். அவர்களின் சான்றிதழ் 3ஆம் விதான தொழில் கல்வி ஆணைக்குழுவால் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. குறித்த தொழில்பயிற்சிக் கூடங்கள் தம்மை 3ஆம் விதான தொழில் கல்வி அணைக்குழுவிலும் பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு பதிவதற்குரிய தகுதிகளையும் பெற்றிருக்கவேண்டும். – என்றும் அதில் சுட்டிக்காட்டப்பட்டது.

347-1-2277aa70ed50730fdaf06868f7579987 copy

Related posts: