பெண்களை வீட்டுப் பணியாளர்களாக அனுப்புவதை முற்றாக நிறுத்துவதற்கான வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார நடவடிக்கை!
Wednesday, February 21st, 2024
வெளிநாட்டு வேலைகளுக்கு பெண்களை வீட்டுப் பணியாளர்களாக அனுப்புவதை முற்றாக நிறுத்துவதற்கான பிரேரணையை தயாரிக்குமாறு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் சங்கத்தின் உயர் நிர்வாகத்துடன் நேற்று (20) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதன்படி, 10 வருடங்களுக்குள் வீட்டுப் பணியாளர்களை வெளிநாட்டு வேலைகளுக்கு அனுப்புவதை முற்றாக நிறுத்தும் வகையில், உரிய பிரேரணையை தயாரிக்குமாறு அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
மாணவர்களின் நலன் கருதி வட மாகாண ஆளுநரின் முக்கிய அறிவிப்பு!
மரண தண்டனை கைதிகளுக்கு புனர்வாழ்வளிக்க நடவடிக்கை - நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவிப்பு!
புத்தாண்டு காலத்தில் பல பகுதிகளில் வெப்பமாக இருக்கும் - நாட்டின் சில பகுதிகளில் மழை பெய்யவும் வாய்ப்...
|
|
|


