வடக்கில் நாளை ஹர்த்தால்!
Tuesday, May 17th, 2016
யுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகளை யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மேற்கொண்டுள்ளது.
நாளை புதன்கிழமை முற்பகல் 10 மணிக்கு யாழ்.பல்கலைக்கழக முன்றல் இந்த அஞ்சலி நினைவேந்தல் இடம்பெறும் என்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நாளை புதன்கிழமை வடக்கு மாகாணத்தில் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் முழுமையான ஹர்த்தால் கடைப்பிடிக்கப்படும் என்று வர்த்தக சங்கங்கள் அறிவித்துள்ளன.
வன்முறைகள், படுகொலைகளுக்கு உள்ளாக்கப்பட்டு உயிர்நீத்த உறவுகளை விசுவாசமாகவும், நன்றியுணர்வாகவும் நினைவுகூர்ந்து அஞ்சலிக்கும் நோக்கில் இதனை மேற்கொள்ளவிருப்பதாக வர்த்தக சங்கங்கள் ஒன்றிணைந்து விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது
Related posts:
சுகாதார சேவையில் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தினார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க!
அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் வெற்றிடங்களை நிரப்புவதற்கு உரிய நடவடிக்கை - 53,000 கல்வியமைச்சர் சுசி...
பொதுத் தேர்தலுக்கான முதற்கட்ட அச்சு நடவடிக்கைகள் ஆரம்பம் - அரச அச்சகமா அதிபர் கங்கானி லியனகே தெரிவிப...
|
|
|


