ரவிராஜ் கொலை வழக்கு விசாரணைக்கு 7 பேர் கொண்ட ஜூரி சபை நியமனம்!
Wednesday, November 23rd, 2016
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலை தொடர்பான வழக்கு விசாரணைகளுக்கு 7 பேர் கொண்ட ஜூரி சபை நியமிக்கப்பட்டுள்ளது..
நடராஜா ரவிராஜ் மற்றும் அவரின் பாதுகாப்பு அதிகாரிகளைக் கொலை செய்தமை உள்ளிட்ட 7 குற்றங்கள் தொடர்பில் வழக்கு விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.முன்னாள் கடற்படை வீரர் மூன்று பேர் உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக இந்த வழக்கு விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்தியதிலக்க முன்னிலையில் ஜூரி சபை நேற்று நியமிக்கப்பட்டதுடன், சாட்சி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Related posts:
வைத்தியசாலை செல்லும் கைதிகளுக்குக் கால் விலங்கு!
உருளைக்கிழங்கு இறக்குமதி வரியை அதிகரிக்க கோரிக்கை!
உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் – யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கை அகற்றப்பட்ட சிறுமியி...
|
|
|


