வைத்தியசாலை செல்லும் கைதிகளுக்குக் கால் விலங்கு!

Friday, October 7th, 2016

சுகவீனம் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலைகளைத் தவிர்ந்த வெளிவைத்தியசாலைகளுக்குக் கொண்டு செல்லப்படும் கைதிகளுக்கும், சந்தேக நபர்களுக்கும் வைத்தியசாலைகளில் வைத்து கால்களில் விலங்கு பூட்டுவதற்குச் சிறைச்சாலைகள் நிர்வாகம் தீர்மானித்துள்ளதாகச் சிறைச்சாலைகள்  ஊடகப் பேச்சாளர் தூர உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

சிகிச்சை பெறும்போது மருத்துவர்களின் வேண்டுகோள் இல்லாமல் விலங்குகளைக் கழற்றமுடியாது எனவும், இவ்வாறு வைத்தியசாலைகளில் சேர்க்கப்படும் ஏராளமான கைதிகளும், சந்தேக நபர்களும் அவர்களுக்கு பாதுகாப்பாக நியமிக்கப்பட்டுள்ள சிறைக் காவலர்களிடமிருந்து தப்பிச் சென்றிருப்பதாகவும் இந்த நிலையைக் கட்டுப்படுத்தவே அவர்களுக்கு கால் விலங்கு பூட்ட தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 2015ஆம் ஆண்டில் மாத்திரம் இத்தகைய 154 பேர் வைத்தியசாலைகளிலிருந்து தப்பிச் சென்றிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Prisoner

Related posts: