ரக்னா லங்கா நிறுவனத்தை கலைப்பதற்கு முடிவு!

ரக்னா லங்கா நிறுவனத்தை கலைப்பதற்கு தீர்மானித்துள்ளதுடன், அந்நிறுவனத்தில் பணியாற்றும் ஓய்வு பெற்ற படையினரின் நலன்களுக்காக குறித்த நிறுவனத்தை தொடர்ந்தும் நடத்துவது தொடர்பில் முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சின் முன்னேற்ற மீளாய்வு கூட்டம் பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.
இதன்போது சிவில் பாதுகாப்பு திணைக்களம், மாணவர் படையணி, தேசிய பாதுகாப்பு கல்வி நிறுவனம், ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம், ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையம், கரையோர பாதுகாப்பு திணைக்களம், ரக்னா லங்கா நிறுவனம் உள்ளிட்ட அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் செயற்பாடுகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் தொடர்பில் இதன் போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.
கடலோர பாதுகாப்பு சேவையில் இருந்து ரக்னா லங்கா மற்றும் லங்கா லொஜிஸ்டிக் நிறுவனங்களை நீக்க பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ள அதேவேளை பாதுகாப்பு படையினருக்காக காணி வழங்குதல் தொடர்பாக விசேட கவனம் செலுத்தவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|