பயணத்தடை தொடர்பில் 5 ஆம் திகதியின் பின்னரே தீர்மானிக்கப்படும் – சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் தெரிவிப்பு!
Thursday, July 1st, 2021
நாடு முழுவதிலும் பயணக்கட்டுப்பாடுகளை மீண்டும் விதிப்பதா இல்லையா என்பது குறித்த பேச்சுவார்த்தை இவ்வாரம் நடைபெறவுள்ளதாக ஊடக சந்திப்பில் பேசிய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஒரு மாதகாலமாக அமுல்படுத்தப்பட்டிருந்த பயணத்தடை காரணமாகேவே இன்று நாளாந்த கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்தை விட குறைந்திருப்பதாக சுட்டிக்காட்டிய அவர், தற்போதைய நிலையில் பயணக்கட்டுப்பாடுகளை விதிப்பது பற்றி தீர்மானம் எடுக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளார்..
எனினும் வருகின்ற 05 ஆம் திகதிவரை நாட்டின் நிலைமையை அவதானித்து மக்கள் செயற்படக்கூடிய விதம் பற்றி சுற்றுநிரூபம் வெளியிடப்பட்டிருக்கின்ற நிலையில், அதன் பின்னரே மேலதிக தீர்மானங்கள் எடுக்கப்படலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கான்ஸ்டபிள் சேவையில் பத்தாயிரம் வெற்றிடங்கள்!
தமக்கான குடிநீரை பெற்றுத்தருமாறு நாச்சிக்குடா ஜேம்ஸ்புரம் பகுதி மக்கள் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் ...
மற்றுமொரு தடுப்பூசியை பயன்படுத்த WHO வின் அனுமதிக்காக காத்திருக்கும் இலங்கை!
|
|
|


