முன்னேற்றத்தை நோக்கிச் செல்லும் இலங்கை !

Thursday, December 15th, 2016

சிறுவர்களை தொழிலாளர்களாக பயன்படுத்துவதை முற்று முழுதாக ஒழிப்பது தொடர்பிலான தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் டி.ஜி.செனவிரட்னவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தால் விதிக்கப்படும் ஜி.எஸ்.பிளஸ் வரிச்சலுகையினை மெல்ல பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையில் தற்போது இலங்கை அரசு மேற்கொண்டு வருகின்றது.

இந்த வகையில் குறித்த சலுகையினை மீள பெற்றுக்கொள்ளப்பட வேண்டிய செயல் ஒழுங்கின் கீழ் சிறுவர்களை வேலைக்கு அமர்த்தும் செயற்பாட்டினை முழுமையாக ஒழிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் சிறுவர்களை தொழிலாளர்களாக பயன்படுத்துவதை முழுமையாக ஒழிப்பது தொடர்பிலான தேசிய கொள்கை ஒன்றினை தயாரித்து அதனை செயற்படுத்தும் நோக்கில் அமைச்சர் செனவிரட்னவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

cabinet_decision

Related posts: