யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதமரின் பிரதிநிதியாக கீதநாத் காசிலிங்கம் பிரதமரால் நியமனம்!
Thursday, March 3rd, 2022
யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதமரின் பிரதிநிதியாக கீதநாத் காசிலிங்கம் பிரதமரால் நியமிக்கப்பட்டுள்ளார்.
யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணை தலைவராக யாழ்மாவட்ட சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் செயற்பட்டு வரும் நிலையில் அவருக்கு எதிராக பொதுமக்களால் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு பல முறைப்பாடுகள் பிரதமர் அலுவலகத்திற்குகிடைக்கப் பெற்றதையடுத்து யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதமரின் பிரதிநிதியாக கீதநாத் காசிலிங்கம் பிரதமர் மகிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டுள்ளார்
இதன் காரணமாக எதிர்வரும் நாட்களில் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் செயற்பாடுகள் அனைத்தும் பிரதமரின் கட்டுப்பாட்டில் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
பணியாளர்களுக்கு பீ.சீ.ஆர். பரிசோதனை? - கொழும்பு மாவட்ட கொரோனா நோய் கட்டுப்பாட்டுப் பிரிவு!
திருமண பந்தத்தில் இணைபவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அதி முக்கிய பரிந்துரைகள் -சுகாதார அமைச்சு!
நீர் வேளாண்மையை மேம்படுத்தும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் மற்றுமொரு கருத்திட்டம் வல்லை ஆற்றில் மு...
|
|
|


