நீர் வேளாண்மையை மேம்படுத்தும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் மற்றுமொரு கருத்திட்டம் வல்லை ஆற்றில் முன்னெடுப்பு!

Tuesday, March 9th, 2021

வடமராட்சி வல்லை ஆற்றில் 10 இலட்சம் இறால் குஞ்சுகள் விடப்பட்டது. கடல் மற்றும் நன்னீர் உயிரின வளர்ப்பு ஊக்கவிப்பு அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இறால் உற்பத்தியை மேம்படுத்தும் வகையில் இன்றையதினம் குறித்த இறால் குஞ்சுகளை உள்ளீடு செய்யப்பட்டன

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோரது வழிநடத்தலில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் எண்ணக்கருவிற்கு அமைய மேற்கொள்ளப்பட்டுவரும் இந்த திட்டத்தில் வடபகுதியின் பல்வேறு நன்னீர் நிலைகளிலும் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு அங்கமாகவே இன்றையதினம் கட்சியின் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் மற்றும் வலி கிழக்கு நிர்வாக பொறுப்பாளர் ஐங்கரன் இராமநாதன் ஆகியோரது தலைமையில் வல்லை ஆற்றில் 10 இலட்சம் இறால் குஞ்சுகள் விடப்பட்டது.

முன்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கறித்த அமைச்சு பொறுப்பை ஏற்றதன் பிற்பாடு வடக்கு மாகாணத்தின் பல்வேறு நீர் நிலைகளில் கடற்றொழிலாளர்களது வாழ்வாதாரம் மேம்படுத்தப்படும் வகையில் கடல் உயிரின உள்ளீடு செய்யும் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வந்ததுடன் அதனூடாக கடற்றொழிலாளர்கள் தமக்கான வாழ்வாதார பொருளாதாரத்தை ஈட்டிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வின்போது  கடற்றொழில் நீரியல் வள யாழ் மாவட்ட பணிப்பாளர் சுதாகரன், வல்வெட்டித்துறை, வலிகாமம் கிழக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும்  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பருத்தித்துறை, கரவெட்டி வலிகாமம் கிழக்கு ஆகிய பிரதேசங்களின் பிரதேச நிர்வாக மற்றும் உதவி நிர்வாக செயலாளர்கள் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: