யாழ். மாவட்டத்தின் சில பிரதேசங்களில் இன்று மின்தடை
 Thursday, July 27th, 2017
        
                    Thursday, July 27th, 2017
            
மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ். மாவட்டத்தின் சில பிரதேசங்களில் இன்று வியாழக்கிழமை(27) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதன் படி, காலை-09.30 மணி முதல் மாலை-05 மணி வரை இளவாலையின் ஒரு பகுதி, ஆலடி, மெய்கண்டான், சேந்தாங்குளம், வலைந்தலைச் சந்தி, சிவாகாமி அம்மன் கோவிலடி, மருதபுரம், வியாவில், ஆலடி, கருங்காலி, காரைநகர்ச் சிவன் கோவிலடி, பொன்னாலை கிருஷ்ணன் கோவிலடி, பொன்னாலை வீட்டுத் திட்டம் ஆகிய பிரதேசங்களில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
இராணுவத்தினரின் உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது!
கடலுக்கடியில் காணப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற கடற்படையினர் நடவடிக்கை!
தபால் சேவையும் அத்தியாவசிய சேவையாக அறிவிப்பு!
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        