யாழ். மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட வெற்றுக் காணிகளிலுள்ள பற்றைகளை வெட்டி அகற்றுமாறு அறிவுறுத்தல்!
Thursday, August 4th, 2016
யாழ். மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட வெற்றுக் காணிகளிலுள்ள படர்ந்துள்ள பற்றைகள், செடிகளை வெட்டி அழிக்குமாறு அறிவுறுத்தல் பிரசுரங்கள் பல்வேறு பகுதிகளிலும் ஒட்டப்பட்டுள்ளன.
குறித்த அறிவுறுத்தல்கள் ஒட்டப்பட்டு 14 நாட்களுக்குள் காணிகள் துப்பரவு செய்யப்பட வேண்டும். காணி உரிமையாளர்கள் குறிப்பிட்ட காலப் பகுதிக்குள் காணிகளைத் துப்பரவு செய்யப்படாவிடில் மாநகர சபையால் காணிகள் துப்பரவு செய்யப்படும். துப்பரவு செய்யப்படுவதற்கான செலவு காணி உரிமையாளர்களிடம் அறவிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
வலி.வடக்கில் விடுவித்த பகுதிகளில் மீள்குடியமர 724 குடும்பங்கள் பதிவு!
மீண்டும் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் அடுத்த வாரம் இறுதி முடிவு - சுகாதார அமைச்சு அறிவிப்பு!
தேர்தல்கள் விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் வர்த்தமானியில் பிரசுரிப்பு!
|
|
|


