யாழ். மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மீள் சுழற்சிக்கான கழிவகற்றல் நடவடிக்கை மீண்டும் ஆரம்பம்!
 Wednesday, November 23rd, 2016
        
                    Wednesday, November 23rd, 2016
            
யாழ். மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மீள் சுழற்சிக்கான கழிவகற்றல் நடவடிக்கைகள் மாநகர சபையின் தொழிலாளர்கள் நிரந்தர நியமனம் கோரி முன்னெடுத்த பணிப் புறக்கணிப்புக் காரணமாகத் தடைப்பட்டிருந்த நிலையில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை(22) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
எனவே, குடியிருப்பாளர்கள் அனைவரும் வழமை போன்று உக்கும், உக்காத பொருட்களைத் தரம் பிரித்துத் தமது வீடுகளுக்கு வெளியே வைத்துக் கழிவகற்றும் நடைமுறைக்குப் பூரண ஆதரவை வழங்க வேண்டுமெனக் கேட்டுள்ள யாழ். மாநகர சபையின் கழிவகற்றும் பிரிவினர் கழிவுகளைத் தேவையற்ற வகையில் வீதியில் கொட்டுவதைத் தவிர்க்க வேண்டுமெனவும் கேட்டுள்ளனர்.

Related posts:
சந்தையில் தற்போது ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாடு திட்டமிடப்பட்டே செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ளது - ...
உத்தியோகபூர்வமாக பதவி விலகினார் கோட்டாபய ராஜபக்ச – புதிய பிரதமரை தெரிவுசெய்ய நாளையதினம் நாடாளுமன்றம்...
சர்வமத தலைவர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு!
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        