யாழ். மக்களுக்கு பொலிஸாரின் விசேட அறிவித்தல்!

Tuesday, May 15th, 2018

யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனையை முற்றாக ஒழிக்க வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் றொஷான்பெர்னாட்டோவால் சிறப்பு பொலிஸ் செயலணி அமைக்கப்பட்டுள்ளது.

குறித்த செயலணியின் பணிகள் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் அது தொடர்பான விழிப்புணர்வு சுவரொட்டிகள் குடாநாட்டின் அனைத்து பொலிஸ் நிலையங்கள்ஊடாகவும் ஒட்டப்படவுள்ளன.

யாழில் மாவா போதைப் பொருள், போதைக் குளிசைகள், ஹெரோயின் மற்றும் கஞ்சா போதைப் பொருள்களின் விற்பனை அதிகரித்துள்ளதுடன் அவற்றை விற்பனைசெய்வோருக்கும் பொலிஸாருக்கும் இடையே தொடர்பு உள்ளதாக வட மாகாண மூத்த பொலிஸ் மா அதிபருக்கு பல முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டிருந்தன. அவைதொடர்பில் விசாரணைகள் இடம்பெறுகின்றன.

இவற்றினை முற்றாக ஒழிக்க சிறப்பு பொலிஸ் செயலணியை மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் நியமித்துள்ளார்.

இந்த செயலணிக்கு பொதுமக்கள் தமது முறைப்பாடுகளை 0766093030 என்ற இலக்கத்திற்கு தொடர்புகொண்டு முன்வைக்க முடியும். முறைப்பாடுகளின் இரகசியத் தன்மைபாதுகாக்கப்படும்.

மேலும் இந்த செயலணி துரிதமாக செயற்பட்டு போதைப் பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் விற்பனையாளர்களைக் கைது செய்வர். எனவே அனைவரும்ஒத்துழைக்கவேண்டும் என்று வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபரின் அலுவலகத் தகவல்கள் தெரிவித்தன.

Related posts:

'நாடும் தேசமும் உலகமும் அவளே' - அரசியல் துறையில் பெண்களது பங்கேற்பு இன்னும் அதிகரிக்கப்பட வேண்டும் –...
கிராமப்புறங்களில் 25 ஆயிரம் வீடுகளின் கூரைகளுக்கு சூரிய மின் தகடுகள் பொருத்த ஏற்பாடு - மின் மற்றும் ...
நுளம்புக் குடம்பிகள் பெருகும் வகையில் சூழலை வைத்திருப்போருக்கு எதிராக பாரபட்சம் இன்றி நடவடிக்கை -வடக...

சீரற்ற வானிலையால் இதுவரையில் 17 பேர் உயிரிழப்பு: 2 இலட்சத்து 71 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு...
சிறுவர்களுக்கு நிகழும் துஷ்பிரயோகங்களை தடுக்க ஒருபோதும் தயங்க வேண்டாம் - நாட்டு மக்களிடம் பிரதமர் வல...
நலன்புரி செயற்பாடுகளுக்கு 187 பில்லியன் ரூபா ஒதுக்கீடு - இவ்வருடத்துக்கும் ஒதுக்குமாறு சர்வதேச நாணய ...