யாழ். பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, உப பொலிஸ் பரிசோதகருக்குத் தண்டனை இடமாற்றம்!
        
                    Monday, October 3rd, 2016
            
மொனராகலை மாவட்டத்தின் கதிர்காமம் பகுதியிலுள்ள பொலிஸ் ஓய்வு விடுதியில் யாழ் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஆகிய இருவரும் முறைகேடாக நடந்து கொண்டமையையடுத்து அவர்கள் இருவரும் இன்றுமுதல்(03) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கடந்த வாரம் தமது விடுமுறையை முன்னிட்டு யாழ். பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் உபபொலிஸ் பரிசோதகர் ஆகிய இருவரும் கதிர்காமம் சென்றிருந்தனர். கதிர்காமத்தில் பொலிஸாரிற்கென அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் ஓய்வு விடுதியில் தங்கியிருந்த சமயம் இவர்கள் மது போத்தல்களுடன் இளம் பெண்கள் சிலருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்தே யாழ். பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி,உப பொலிஸ் பரிசோதகர் ஆகியோருக்குத் தண்டனை இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இதன் படி, யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மட்டக்களப்பிற்கும், உபபொலிஸ் பரிசோதகர் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்

Related posts:
| 
                        
                        
                        
                        
                        
                        
                        
                        
                        
                        
                         | 
                    
  | 
                
            
        

