சுவிஸ் நாட்டின் தூதுவருக்கும் வடமாகாண ஆளுநருக்குமிடையில் சந்திப்பு

Tuesday, June 14th, 2016

வடக்கின் நிலமைகள் தொடர்பில் ஆராய்வதற்காக யாழ். குடாநாட்டிற்கு  விஜயமொன்றை மேற்கொண்டுள்ள சுவிஸ் நாட்டின் இலங்கை மற்றும் மாலைதீவுகளிற்கான தூதுவர் கைன்ஸ் வோக்கர் நெடகோன் அடங்கிய குழுவினர் நேற்றுத் திங்கட்கிழமை(13-06-2016) வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரேயைச் சந்தித்துக்  கலந்துரையாடியுள்ளனர்.

யாழ்ப்பாணத்திலுள்ள வடமாகாண ஆளுனர் செயலகத்தில் இடம்பெற்ற குறித்த சந்திப்பில் மத்திய அரசாங்கத்தினால் வடக்கில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அபிவிருத்தி செயற்பாடுகள் மற்றும் நல்லிணக்க நடவடிக்கைகள் தொடர்பில் ஆளுநர் தூதுவருக்கு விளக்கமளித்தார்.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் பின்னர் யாழ் மாவட்டத்தின் மீள்குடியேற்ற மற்றும் வாழ்வாதார நடவடிக்கைகள் தொடர்பிலும் சுவிஸ் நாட்டின் தூதுவர் இதன்போது கேட்டறிந்து கொண்டார்.

Related posts:


நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஆசனங்களை ஒதுக்கும் நடவடிக்கைகள் ஆரம்பம் - நாடாளுமன்ற பிரதி பொதுச் செயல...
பாதுகாப்பிற்கு சவாலாக விளங்கும் புர்கா ஆடையை விரைவில் தடை – நாடாளுமன்றில் பாதுகாப்பு அமைச்சர் அறிவ...
பாதீட்டினூடாக அரச ஊழியர்களது ஊதிய விவகாரத்திற்கு தீர்வு - நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நிதி அ...