வரி வருமானங்களை முறையாக சேர்க்கும் பொறுப்பு அரச அதிகாரிகளுக்கே உரியது – தவறும் அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடுக்க நடவடிக்கை !

Friday, December 15th, 2023

நாட்டில் அதிகரிக்கப்பட்டிருக்கும் வரி வருமானங்களை முறையாக சேர்க்கும் பொறுப்பு அரச அதிகாரிகளுக்கே இருக்கிறது. அதனை செய்ய தவறும் அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடுக்க நடவடிக்கை எடுப்போம் என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று  இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாட்டின் மொத்த வருமானம் சர்வதேச நாணய நிதியத்தின் இலக்கை எட்டக்கூடியதாக இருக்கிறது. நாட்டை கட்டியெழுப்ப பயணிக்க வேண்டிய வழியை ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார்.

வங்குராேத்து அடைந்திருக்கும் நாட்டை மீள கட்டியெழுப்ப அரச வருமானம் அதிகரிக்கப்பட வேண்டும். அதனாலே தற்போது வரி அதிகரிக்கப்பட்டிருக்கிறது.

அதனால் அரச வருமானங்களை சேகரிக்கும் அதிகாரிகள் அதனை முறையாக செய்ய வேண்டும்.  கடந்த காலங்களில் இந்த அதிகாரிகள் தங்களின் பொறுப்பை முறையாக செய்ய தவறியதாலே அரச வருமானம் குறைவடைந்திருந்தது.

இந்த அதிகாரிகளின் மோசடிகளை நிறுத்த இவர்களின் செயற்பாடுகளை கண்காணிக்கவும் முறையாக செயற்படாத அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடுக்கவும் தற்போது சட்டம் அமைக்கப்பட்டிருக்கிறது.

மேலும் அரச வருமானம் சேகரிக்கும் அதிகாரிகளில் இருக்கும் ஊழல் மோசடிமிக்க அதிகாரிகளை கண்டுபிடிக்க வேண்டும். எதிர்வரும் ஜனவரி முதல் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய தேங்காய் எண்ணெய் தொகையை நாட்டிலேயே அழிக்க முடியும் - மத்திய சுற்றாடல் அத...
60 வயதுக்கு மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மூன்றாவது கொவிட் தடுப்பூசி - சுகாதார சேவைகள் பணிப்...
குறுகிய அரசியல் நோக்கத்துக்காகவே நல்லாட்சி அரசாங்கம் தேசிய பாதுகாப்பை காட்டிக் கொடுத்தது. - நாடாளுமன...