ஆதில் பாக்கிர் மாக்காரின் மரணத்தில் எதுவித சந்தேகமுமில்லை!
Tuesday, October 18th, 2016
இலண்டனில் உயிரிழந்த, ஆதில் பாக்கிர் மாக்காரின் மரணத்தில் எவ்வித சந்தேகமுமில்லை என ஸ்கொட்லாந் யாட் பொலிஸார் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளன.
தேசிய ஊடக மத்திய நிலையத்தின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான இம்தியாஸ் பாக்கீர் மாக்காரின் மகனும் சட்டத்தரணியுமான ஆதில் பாக்கீர் மாக்கார்(25), இலண்டனில் கடந்த புதனன்று(12) காலமானார்.
இவர், பொருளாதாரம் மற்றும் அரசியல் விஞ்ஞானத்துக்கான இலண்டன் பல்கலைக்கழகத்தில் ஒப்பாய்வு அரசியற்றுறையில் முதுமானிக் கற்கைகளை மேற்கொண்டு வந்த நிலையிலேயே காலமாகியுள்ளார். சுகயீனம் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த அவர், தான் தங்கியிருந்த அறையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts:
ஆசிரியையின் கோபத்தால் தீக்கிரையானது புத்தகங்கள்!
இலங்கையில் நேற்றையதினமும் 541 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – இதுவரை 4 இலட்சத்து 50 ஆயிரத்து பிசிஆர...
நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின்னர் உள்ளூராட்சிமன்றத் தேர்தல்!
|
|
|
தவறான கருத்துக்களைப் பரப்பி எதிர்ப்பதற்கு பதிலாக ஒரு தேசமாக முன்னேறுவதற்கு அனைவரும் ஒன்றுபட வேண்டும்...
பொலிஸ் மா அதிபர் பதவிக்கு பதில் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோனை நியமிப்பதே சிறந்தது - பொது பாது...
சாவால்களைக் கண்டு அஞ்சாது கொள்கைகளில் உறுதியாகவிருந்து முன்னேற்றிச் செல்லும் சந்ததியை கல்வியின் மூலம...


