வெள்ள அனர்த்தம் – யாழ். மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்ப – அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் தெரிவிப்பு!

Friday, December 22nd, 2023

வெள்ள அனர்த்தம் காரணமாக யாழ்ப்பாணத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக யாழ்ப்பாண அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் இதுவரை 2 ஆயிரத்து 33 குடும்பங்களைச் சேர்ந்த 6 ஆயிரத்து 738 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக  அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வெள்ளப்பெருக்கு காரணமாக கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 320 குடும்பங்களைச் சேர்ந்த 974 பேரும், உடுவில் பிரதேச செயலர் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேரும், சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவில் 63 குடும்பங்களைச் சேர்ந்த 215 பேரும், சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 79 குடும்பங்களைச் சேர்ந்த 259 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவில் 212 குடும்பங்களைச் சேர்ந்த 712 பேரும், சங்கானை பிரதேச செயலர் பிரிவில் 783 குடும்பங்களைச் சேர்ந்த 2683 பேரும், தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவில் 117 குடும்பங்களைச் சேர்ந்த 439 பேரும், கரவெட்டி பிரதேச செயலர் பிரிவில் 42 குடும்பங்களைச் சேர்ந்த 144 பேரும் வெள்ள நிலையை எதிர்கொண்டுள்ளனர்.

அத்தோடு காரைநகர் பிரதேச செயலர் பிரிவில் 79 குடும்பங்களைச் சேர்ந்த 260 பேரும், யாழ்ப்பாண பிரதேச செயலர் பிரிவில் 14 குடும்பங்களைச் சேர்ந்த 57 பேரும், வேலணை பிரதேச செயலர் பிரிவில் 13 குடும்பங்களைச் சேர்ந்த 49 பேரும், ஊர்காவற்துறை பிரதேச செயலர் பிரிவில் 310 குடும்பங்களைச் சேர்ந்த 940 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்  மலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்து

000

Related posts: