யாழ். நுணாவில் பகுதியில் பிறந்து 11 நாட்களேயான குழந்தை தாய்ப்பால் புரைக்கேறிப் பலி!

Thursday, October 27th, 2016

யாழ்நுணாவில் பகுதியில் பிறந்து 11 நாட்களேயான குழந்தை தாய்ப்பால் புரைக்கேறி இன்று புதன்கிழமை (26) அதிகாலை உயிரிழந்துள்ளதாகச் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்.நுணாவில் பகுதியைச் சேர்ந்த ரவீந்திரசர்மா பிரகதீஸ்சர்மா என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

அதிகாலை 12.30 மணியளவில் நித்திரை விட்டெழுந்த குழந்தைக்குத்  தாயார் தாய்ப்பால் கொடுத்துள்ளார். தாய்ப்பால் அருந்திய பின்னர் சிசுவுக்கு விக்கல் ஏற்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து குழந்தையை சாவகச்சேரி  வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ற போதும் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்

babydeath

Related posts: