இடிந்து விழுந்த கொக்குவில் ஆடியபாதம் வீதிப் பாலத்தின் கரையோரக் கட்டுமானம் புனரமைப்பு !

Saturday, November 26th, 2016

யாழ். கொக்குவில் ஆடியபாதம் வீதியில் பாலத்தின் கரையோரக் கட்டுமானப் பணிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை(20) கடும் மழையுடன் வீசிய பலத்த காற்றுக் காரணமாக இடிந்து விழுந்துள்ளது. இதன் காரணமாகக் குறித்த வீதியால் போக்குவரத்துச் செய்வோர் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியிருந்த நிலையில் இந்தப் பாலத்தின் புனரமைப்புப் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான இந்த வீதியின் பாலக் கரையோரக் கட்டுமானப் பணிகள் கடந்த ஆறு மாதத்திற்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இடைநடுவில் இழுபறிநிலையிலிருந்த இந்த வீதியின் புனரமைப்பு வேலைகள் கடந்த இரு வாரங்களிற்கு முன்னரே நிறைவுக் கட்டத்தை எட்டியிருந்தது. இவ்வாறான நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை(20) கடும் மழையுடன் வீசிய பலத்த காற்றுக் காரணமாக இந்தப் பாலத்தின் புனரமைக்கப்பட்ட கரையோரப் பகுதி இடிந்து விழுந்துள்ளது.

இது தொடர்பில் பொதுமக்கள் நல்லூர்ப் பிரதேச சபைக்கு வழங்கிய தகவலையடுத்து அப் பகுதியில் பாதுகாப்புத் தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக நல்லூர் பிரதேச சபையால் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது. இதனையடுத்துப் பாலத்தின் கரையோரக் கட்டுமானப் பணிகளின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இடம்பெற்று வருகிறது.

unnamed (1)

Related posts: