யாழ் குடாவில் பெருந்தொகை இறால் பிடிபாடு!

Wednesday, February 22nd, 2017

யாழ் குடாநாட்டில் கடந்த ஜனவரி மாதம் வரையில் பெருமளவு இறால் பிடிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 20 வகையிலான மீனினங்கள் பிடிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

2017ஜனவரி மாதம் வரை யாழ் குடாநாட்டு கடற்பரப்பில் மொத்தமாக 578,910 கிலோகிராம் இறால் பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.யாழ் மாவட்ட நீரியல் வள திணைக்கள புள்ளிவிபரவியலில் இருந்து இந்த தகவல்கள் தெரியவந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது..

யாழ் குடாநாட்டில் தாளையடி, பருத்தித்துறை மேற்கு, கிழக்கு, காங்கேசன்துறை மேற்கு, கிழக்கு சண்டிலிப்பாய், சுழிபுரம், ஊர்காவற்துறை, நெடுந்தீவு, வேலணை, யாழ்ப்பாணம் கிழக்கு, மேற்கு, சாவகச்சேரி, ஆகிய 14 மீன்பிடி பிரதேசங்களில் இவை பிடிக்கப்பட்டுள்ளன.இதேவேளை இவற்றில் அதிகமாக ஏற்றுமதி செய்யப்படும் பொருளாக சிவப்பு இறாலுக்கு யாழ் சந்தையில் நல்ல விலை கிடைத்துவருகின்றது.

201606251227508114_officials-take-action-against-illegal-prawn-farms-running-in_SECVPF

Related posts: