அதிவேக வீதிகளில் வேகக்கட்டுப்பாட்டை மீறி பயணிக்கும் பேருந்துகள் மீதான அபராதத் தொகை அதிகரிப்பு!

Friday, September 23rd, 2016

அதிவேக வீதிகளில் வேக எல்லையைத் தாண்டி, போக்குவரத்தில் ஈடுபடும் பபேரந்துகளிடமிருந்து அறவிடப்படும் அபராதத்தை 5,000 ரூபாவாக உயர்த்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வேக விதிமுறைகளை மீறும் பஸ்களிடமிருந்து தற்போது அறவிடப்படும 1000 ரூபா அபராதம் போதுமானதாக இல்லையென ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஏ.பீ. ஹேமசந்திர கூறினார்.அதிவேக வீதிகளில் மணிக்கு 100 கிலோமீற்றர் வேகத்திலேயே பயணிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டார்.

ஆயினும் சில பஸ்கள் மணிக்கு 120 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்கின்றமை தொடர்பில் பதிவாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, வேக எல்லையை மீறி பயணித்த சுமார் 30 பஸ்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.வேக எல்லையை மீறி பஸ்கள் பயணிப்பதை தடுப்பதற்காக, அறவிடப்படும் அபராத தொகையை 1000 ரூபாவிலிருந்து இருந்து 5000 ரூபாவாக உயர்த்துவது தொடர்பில் போக்குவரத்துப் பிரிவு பொலிஸாரிடமிருந்து யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

highway-1

Related posts: