சுத்தமான குடிநீர் வேண்டி ரொசல்ல கிராம பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம்

Sunday, March 27th, 2016

சுத்தமான குடிநீர் வேண்டும் என கோரி ரொசல்ல கிராம பகுதி மக்கள் நேற்று (27) வட்டவளை ரொசல்ல சந்தியில் பதாதைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பிய வண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 35ற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். பல வருட காலமாக குடிநீர் சுத்தமாக கிடைப்பதில்லை எனவும், சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை தெரிவித்தும் பிரச்சினை தீராத பட்சத்தில் இம்மக்கள் இப் போராட்டத்தில் ஈடுப்பட்டதாக தெரிவிக்கின்றனர்.

எனவே இது தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தீர்வு பெற்று தர வேண்டும் என ஆர்ப்பாட்டகார்கள் கோரிக்கை விடுத்துள்னர்.

Related posts:


நல்லூர் தேர், தீர்த்த உற்சவ நாட்களில் நேர்த்திக்கடன் நிறைவேற்ற விரும்பும் அடியவர்களின் முக்கிய கவனத்...
அவசியமற்ற வருகைகளைத் தவிருங்கள் - யாழ். போதனா வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் பொதுமக்களிடம் வேண்டுகோள...
பயன்படுத்தப்படாத வயல்கள் மற்றும் காணிகளை பயிர்ச்செய்கைக்கு உட்படுத்தும் விசேட வேலைத்திட்டம் ஆரம்பம்!