யாழ்.குடாநாட்டில் சனியன்றிரவு அதிகூடிய மழை வீழ்ச்சி!
Monday, November 21st, 2016
நேற்று பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை வீழ்ச்சி கிடைத்தது. வளிமண்டலவியல் திணைக்களத் தகவலில், நேற்று முன்தினம் இரவு 8.30மணியில் இருந்து நேற்றுக்காலை 8.30மணிவரை 97.7மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியது. இதவரை கிடைத்த வாசிப்பில் யாழ்.மாவட்டத்தில் கிடைத்த அதிகூடிய மழைவீழ்ச்சி இதுவாகும். நேற்றுக்காலை 8.30 மணியிலிருந்து மாலை 5.30மணிவரை 5.8 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியது.
நயினாதீவில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை காலை 8.30 தொடக்கம் நேற்றுக்காலை 8.30மணிவரை 104 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பெறப்பட்டது. நடப்பு ஆண்டில் ஒரே தினத்தில் இலங்கையில் பெற்ற அதிகூடிய மழைவீழ்ச்சி இதுவாகும் என்று வளிமண்டலவியல் திணைக்கள பொறுப்பதிகாரி ரி.பிரதீபன் தெரிவித்துள்ளார்.

Related posts:
1500 ஏக்கர் காணிகளில் வலி வடக்கில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளது - மேலதிக அரசாங்க அதிபர்!
கறிமுருங்கைச் செய்கை யாழ்ப்பாணத்தில் அதிகரிப்பு!
மூன்று வேளை உணவை வழங்க நடவடிக்கை - அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டதாக பிரதமர் ரணில் தெரிவிப்பு!
|
|
|


