யாழ்.குடாநாட்டில் கோவா விலை வீழ்ச்சியால் கோவாச் செய்கையாளர்கள் கடுமையாகப் பாதிப்பு!

Saturday, December 31st, 2016

யாழ். மாவட்டத்தில் மரக்கறி வகைகளில் ஒன்றான கோவாவின் விலையில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளமையால் கோவாச் செய்கையாளர்கள் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளனர்.

புன்னாலைக்கட்டுவன், ஏழாலை, குப்பிளான், ஊரெழு, உரும்பிராய், சுன்னாகம், மருதனார்மடம்,  கோப்பாய், புத்தூர், நிலாவரை, கரவெட்டி, கரணவாய் போன்ற பகுதிகளில் 1654 ஹெக்டேயர்  நிலப்பரப்பில் பயிரிடப்பட்டுள்ள கோவா மரக்கறிப் பயிர்ச் செய்கையின் அறுவடை ஆரம்பமாகித் தற்போது மும்முரமாக இடம்பெற்று வருகின்றன.

இவ்வாறான நிலையில் யாழ்.குடாநாட்டின் முக்கிய சந்தையான திருநெல்வேலிப் பொதுச் சந்தையில் தற்போது ஒரு கிலோ கோவா  ஒரு கிலோ கோவா 10 ரூபா முதல் 15 ரூபா வரை விவசாயிகளிடமிருந்து வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டு 20 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கோவாவின் விலையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளமையால் கோவாச் செய்கையாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

unnamed (4)

unnamed (3)

Related posts: