அன்னை தெரசாவுக்கு ‘புனிதர்’ பட்டம்!

Thursday, March 17th, 2016
மறைந்த அன்னை தெரசாவிற்கு புனிதர் பட்டம் வழங்க போப் ஒப்புதல் அளித்துள்ளார். வரும் செப்டம்பர் 4-ம் திகதி புனிதர் பட்டம் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மறைந்த அன்னை தெரசாவுக்கு ‘புனிதர்’ பட்டம வழங்கப்பட வேண்டும் என்று ஏற்கனவே சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. அந்த சிபாரிசு பற்றி புனிதர் பட்டத்துக்கு ஒப்புதல் வழங்கும் வாடிகன் குழு, இன்று கூடி ஆலோசனை நடத்தியது.

அன்னை தெரசா உள்பட 5 பேர் பெயர், புனிதர் பட்டத்துக்கான பரிசீலனை செய்யப்பட்டது. இந் நிலையில் அன்னை தெரசாவுக்கு ‘புனிதர்’ பட்டம் வழங்க போப் ஒப்புதல் அளித்தார். வரும் செப்டம்பர் 4-ம்  திகதி புனிதர் பட்டம் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கும் விழா ரோமில் நடத்த உள்ளதாகவும் அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டத்துக்கு முந்தைய அந்தஸ்து, கடந்த 2003–ம் ஆண்டு அளிக்கப்பட்டது.

அவருக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசு, 1979–ம் ஆண்டு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கும் விழா, செப்டம்பர் 4–ம் திகதி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த விழாவை கொல்கத்தாவில் நடத்த வேண்டும் என்றும், அதற்காக போப் ஆண்டவர் கொல்கத்தாவுக்கு வர வேண்டும் என்றும் இந்திய கத்தோலிக்க திருச்சபை ஏற்கனவே வேண்டுகோள் விடுத்துள்ளது.

அதை ஏற்று கொல்கத்தாவில் விழா நடத்தப்படுமா? அல்லது ரோம் நகரிலேயே நடத்தப்படுமா? என்பது இன்னும் தெரியவில்லை.

Related posts: