யாழ்ப்பாண பொலிஸாரினால் யாழ் நகரப்பகுதியில் உள்ள யாசகர்களுக்கு மதிய உணவுகள் வழங்கிவைப்பு!

யாழ்ப்பாண பொலிஸாரினால் யாழ் நகரப்பகுதியில் உள்ள யாசகர்களுக்கு மதிய உணவுகள் இன்று வழங்கி வைக்கப்பட்டன.
நாட்டில் நடைமுறையில் உள்ள பயணத்தடை காரனமாக யாழ் நகரை சூழவுள்ள பகுதிகளில் யாசகம் பெறும் யாசகர்கள் உணவுக்காக கஸ்ரங்களை எதிர்நோக்கி வருகின்றார்கள்.
இந்த நிலையிலேயே இன்றையதினம் யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோ தலைமையிலான பொலிஸ் உத்தியோகத்தர்கள் உணவில்லாமல் பாதிக்கப்பட்ட யாசகர்களுக்கு சமைத்த உணவுகளை வழங்கியுள்ளனர்.
அத்தோடு நாளையதினமும் இவ்வாறு உணவுகளை வழங்கி வைப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இ.போ.ச பேருந்தின் தொழில் நுட்ப கோளாறே விபத்துக்குக காரணம் !
முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் 17 இலட்சத்தக்கும் அதிகமான சதுர மீற்றர் பரப்பளவில் இருந்து 29 ...
மாலைத்தீவுக்கு அருகில் இன்றுகாலை நான்கு நில அதிர்வுகள் பதிவு - புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப்...
|
|