யாழ்ப்பாணம் கொழும்புத்துறை பகுதியில் ஒருவர் மீது வாள்வெட்டு

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை பகுதியில் ஒருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய கும்பல் ஒன்று அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது. தாக்குதலுக்குள்ளானவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தயசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று மாலை 4 மணியளவில் இடம்பெற்றது.இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல், மோட்டார் சைக்கிளில் பயணித்தவரை வழிமறித்து வாள்வெட்டுத் தாக்குதலை நடத்தியதுடன் அவர் பயணித்த மோட்டார் சைக்கிளையும் சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பித்தது. பழைய பகையைத் தீர்க்கும் வகையிலேயே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப விசாரணைகளின் பின் பொலிஸார் தெரிவித்தனர்.
Related posts:
நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணியம்பாள் ஆலய இரதோற்சவம் காண அலைகடலெனத் திரண்ட பக்தர் கூட்டம்
பிரான்ஸ் நாட்டு அழகியாக இலங்கை தமிழ் பெண்!
அனைத்து அரச ஊழியர்களுக்கும் இன்று வேதனம் - நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு!
|
|